சுடச்சுட

  

  நெய்வேலி அருகே செல்லிடப்பேசி கடையை அடித்து நொறுக்கி, அதன் உரிமையாளரை தாக்கியது தொடர்பாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

  நெய்வேலி மந்தாரக்குப்பம், சிவாஜி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (30). விருத்தாசலம் பிரதான சாலையில் செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறார்.

  இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், தனது நண்பர் பிரபாகரனுடன் வந்தாராம்.

  அப்போது, எனது தம்பி கார்த்திக்குடன் சேர்ந்து குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறாயா எனக்கேட்டு தகராறு செய்தாராம். பின்பு, இருவரும் கடையில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கி, சந்திரசேகரனை தாக்கினராம். இதுகுறித்து சந்திரசேகரன் அளித்தப் புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai