சுடச்சுட

  

  பெண்ணின் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

  கடலூர், பாதிரிக்குப்பம் மணியக்காரன் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மகள் பிரியதர்ஷினி (30). இவருக்கும், சுந்தரவாண்டி திரெளபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜீ என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

   கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரியதர்ஷினி தனது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக்கொண்டு உடல் கருகி உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற ராஜீ காயமடைந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

  இதற்கிடையே, பிரியதர்ஷினியின் தந்தை நாகராஜ் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai