சுடச்சுட

    

    பண்ருட்டி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

    பண்ருட்டி ஒன்றியம், கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பாக்கியராஜ் (30). இவர், ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் கடலூருக்குச் சென்றுவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். பண்ருட்டி அடுத்துள்ள ஆண்டிப்பாளையம் அருகே வந்த போது, எதிரே வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் உத்தராபதி அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai