விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கூட்டம்
By கடலூர் | Published on : 29th March 2016 06:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கடலூர் கிழக்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில், வழுதலம்பட்டு கிராமத்தில் முகாம் செயற்குழு மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி தொகுதிச் செயலர் ஏ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் இல.திருமேனி, குறிஞ்சிப்பாடி தொகுதி துணைச் செயலர் வே.முரளி, ஒன்றியச் செயலர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மக்களவைத் தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், சட்டப் பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் அணியை வெற்றி பெறச் செய்வது. மாவட்டத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில் தொடர்ந்து திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, சதீஷ், மணிகண்டராஜா, நகர அமைப்பாளர் இளையராஜா, ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட துணை அமைப்பாளர் ஜான்சன் வரவேற்க, ஒன்றிய துணைச் செயலர் நடராஜன் நன்றி கூறினார்.