சுடச்சுட

    

    விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நிழற்கூரை அமைக்கப்படுமா?: வெயிலில் பயணிகள் அவதி

    By விருத்தாசலம்  |   Published on : 29th March 2016 06:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருத்தாசலம் ரயில் நிலையத்தில்  முழுமையான அளவில் நிழற்கூரை வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு, சென்னை, திருச்சி, சேலம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ரயில்கள் வந்து செல்கின்றன.

    இங்கு 4 நடைமேடைகள் உள்ளன. இந்த ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்காண பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆனால், அவர்களுக்கு ஏற்ப போதுமான வசதிகள் இல்லை.

     இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ரயில் நிலையம் இருவழிப் பாதையாக மாற்றப்பட்டது.

    இதில், திருச்சியில்  இருந்து சென்னை செல்லும் ரயில்கள் நடைமேடை 2இல் நிறுத்தப்படுகின்றன.

     ஆனால், அந்த நடைமேடையில், ஒரு பகுதியில் மட்டுமே நிழற்கூரை உள்ளது. இதனால் மற்ற இடங்களில் நிற்கும் பயணிகள் வெயிலால் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல், ஒலி பெருக்கி அறிவிப்பு, குடிநீர் போன்ற வசதிகளும் முறையாக அந்த நடைமேடையில் இல்லை. இதனால், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.   எனவே, ரயில்வே நிர்வாகம் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை விரைந்து செய்துதர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai