சுடச்சுட

  

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய நிர்வாகிகள் சிதம்பரம் வடக்கு மெயின்ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  மாவட்டச் செயலர் பால.அறவாழி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், புதிய நிர்வாகிகள் ஊடக மைய மாநில துணைச் செயலர் ப.செ.கார்க்கிவளவன், அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை மாநில துணைச் செயலர் கனகசபை, வழக்குரைஞர் அணியின் கடலூர் மாவட்ட அமைப்பாளர் சங்கர், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலர் செய.ஜெயராமன் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  நிகழ்ச்சியில் மண்டலச் செயலர் சு.திருமாறன், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் வ.க.செல்லப்பன், மாவட்ட துணைச் செயலர் செ.செல்வமணி, நகர்மன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, நிர்வாகிகள் வே.சுதாகர், ரா.ஜவகர், குறிஞ்சிவளவன், ஆதிமூலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai