சுடச்சுட

    

    அரசுப் பள்ளி கட்டடப் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்: தரமில்லை என புகார்

    By கடலூர்  |   Published on : 30th March 2016 06:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திட்டக்குடி அருகே அரசுப் பள்ளி கட்டடப் பணி தரமில்லாமல் நடைபெறுவதாகக் கூறி கிராம மக்கள் கட்டுமானப் பணியை செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினர்.

    திட்டக்குடியை அடுத்துள்ள கொரக்கையில் இயங்கி வந்த அரசு நடுநிலைப் பள்ளி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்காக அரசு சார்பில் ரூ.1.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தற்போது கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆனால், இந்தப் பணிகள் தரமானதாக இல்லையென கிராம மக்கள் மற்றும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர். எனவே, கட்டுமானப் பணியை தொடரக் கூடாதென வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

    இதுகுறித்த தகவலின் பேரில் திட்டக்குடி வட்டாட்சியர் ரவிச்சந்திரன், ராமநத்தம் காவல் ஆய்வாளர் ராஜாராம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கிருந்த கட்டட ஒப்பந்ததாரர், கிராம மக்கள் சுட்டிக்காட்டிய குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, கட்டடம் தரமாகக் கட்டித்தரப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து கிராம மக்கள்  கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், தரமில்லாமல் பள்ளிக் கட்டடம் கட்டினால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் ஏற்படும். எனவே, வகுப்பறைக் கட்டடம் தரமாகக் கட்டப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றனர். இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தது: பள்ளிக்  கட்டடங்கள் தரமாகக் கட்டப்படுகிறதா என்பதை கல்வித் துறை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. எனினும், இப்பிரச்னை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai