Enable Javscript for better performance
ஆசிரியை அவதூறுப் பேச்சு: மாணவி தற்கொலை முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியை அவதூறுப் பேச்சு: மாணவி தற்கொலை முயற்சி

    By விருத்தாசலம்  |   Published on : 30th March 2016 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருத்தாசலம் அருகே அரசுப் பள்ளி  மாணவி ஒருவர் ஆசிரியை அவதூறாகப் பேசியதாகக் கூறி செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    விருத்தாசலம் அருகே உள்ள சத்தியவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி செவ்வாய்க்கிழமை

    விஷம் குடித்த நிலையில், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து, மாணவியின் சகோதரர் கூறுகையில், எனது தங்கை செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு சென்று பாதியில் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    இதுகுறித்து கேட்டபோது, 8ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியை தன்னை அவதூறாகப் பேசியதாகவும் இதனால் பள்ளி கழிவறையில் சக மாணவிகள் 3 பேருடன் சேர்ந்து விஷம் குடித்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் என்றார்.

     இதுகுறித்த தகவல் பரவியதை அடுத்து மாணவிகளின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சத்தியவாடியில் சாலையில் மறியலில் ஈடுபட வந்தனர். அவர்களிடம் கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.

    பின்னர், மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் பள்ளி வளாகத்தில் திரண்டனர்.

    இதையடுத்து, மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அ.ச.கார்த்திகேயன் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.

     பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

    இவருடன் சேர்ந்து விஷம் குடித்ததாகக் கூறப்படும் 3 மாணவிகளில்  இருவரை அவரது பெற்றோர் வீட்டுக்குச் அழைத்துச் சென்றுவிட்டனர். ஒரு மாணவி மட்டும் பள்ளியில் இருப்பதாகவும், 3 மாணவிகளும் நலமாக உள்ளதாகவும் பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து, டிஎஸ்பி கார்த்திகேயன் கூறுகையில், சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai