சுடச்சுட

  

  சிதம்பரத்தில் உரிய ஆவணம் இல்லாமல் இயக்கப்பட்டதாக 5 ஆட்டோக்களை போக்குவரத்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.

  போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையில், உதவி ஆய்வாளர்கள் விஸ்வநாதன், அருணாசலம் ஆகியோர் சிதம்பரம் மேலரத வீதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உரிமம் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டதாக 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

  மேலும், ஒருவழிப் பாதை விதிகளை கடைபிடிக்க வேண்டும், கட்டாயம் சீருடை அணிய வேண்டும், உரிமம் இன்றி இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai