Enable Javscript for better performance
கருவேப்பிலங்குறிச்சி நிறுத்தத்தில் வெயிலில் தவிக்கும் பயணிகள்: நிழற்குடை அமைக்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    கருவேப்பிலங்குறிச்சி நிறுத்தத்தில் வெயிலில் தவிக்கும் பயணிகள்: நிழற்குடை அமைக்கப்படுமா?

    By விருத்தாசலம்  |   Published on : 30th March 2016 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில்  நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    விருத்தாசலம் - திருச்சி சாலை மற்றும் விருத்தாசலம்- ஜெயங்கொண்டம், கும்பகோணம் சாலையில் உள்ள முக்கியப் பகுதியாக கருவேப்பிலங்குறிச்சி உள்ளது. இந்த ஊருக்கு, கார்மாங்குடி, வல்லியம், மருங்கூர், தேவங்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட திரளான மக்கள் வந்து செல்கின்றனர்.

     இதேபோல், இப்பகுதி வழியாக ராஜேந்திரப்பட்டினம், ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட ஊர்களுக்கும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். ஆனால், கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால் பயணிகள் வெயில், மழையின்போது மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

     இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கருவேப்பிலங்குறிச்சி நிறுத்தத்தில் வெயிலில் காத்திருக்க முடியவில்லை. குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு நிழற்குடை அமைத்துத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai