சுடச்சுட

  

  காசோலை மோசடி வழக்குத் தொடர்பாக ஒருவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

  கடலூர் திருப்பாதிரிபுலியூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். அதேப் பகுதியில் மிக்ஸி, கிரைண்டர் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவரிடம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி பெட்டி பழுது நீக்குநர் ச.கார்த்திகேயன் (47) என்பவர் கடந்த 2011ஆம் ஆண்டில் ரூ.4 லட்சம் கடன் பெற்றிருந்தாராம். இதற்காக, காசோலைகளை கார்த்திகேயன் வழங்கினாராம்.

   இந்த நிலையில், சுப்பிரமணியன் காசோலையை வங்கியில் செலுத்தியுள்ளார். ஆனால், போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பியுள்ளது. இதையடுத்து, கடந்த 2012ஆம் ஆண்டில் கார்த்திகேயன் மீது சுப்பிரமணியன் கடலூர் நீதித்துறை நடுவர் எண்-3இல் வழக்குத் தாக்கல் செய்தார்.

   வழக்கினை நீதிபதி பிரபாவதி விசாரித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். அதில், ரூ.4 லட்சத்தை 2 மாதங்களில் கார்த்திகேயன் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும், 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai