Enable Javscript for better performance
சிறப்புக் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முழு ஒத்துழைப்பு: என்எல்சி தலைவர்- Dinamani

சுடச்சுட

    

    சிறப்புக் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முழு ஒத்துழைப்பு: என்எல்சி தலைவர்

    By நெய்வேலி  |   Published on : 30th March 2016 06:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறப்புக் குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்எல்சி நிறுவனம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என அதன் தலைவர் சரத்குமார் ஆச்சார்யா கூறினார்.

    நெய்வேலி என்எல்சி நிறுவனம், சிறப்புக் குழந்தைகளுக்கான (மாற்றுத் திறனாளி) சிநேகா சிறப்புப் பள்ளியை நடந்தி வருகிறது. இங்கு 43 குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கப்படுகிறது. சிறப்புக் குழந்தைகளுக்கான தேசிய நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் டிச.8இல் கொண்டாடப்படுவது வழக்கம். கடலூர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் கனமழை பெய்ததால், இந்த விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த சிநேகா வாய்ப்புச் சேவைகள் அமைப்பின் தலைவி யோகமாயா ஆச்சார்யா பேசியதாவது:

    என்எல்சி நிறுவனம் சிறப்பு குழந்தைகளின் நலனுக்காக நிதி வழங்கி வருகிறது. இவர்களுக்கு வாழ்க்கைக் கல்வி, குணநலன் மேம்பாடு, தொழிற்கல்வி வழங்கப்படுவதால் வாழ்வாதாரத்துக்கு வழிதேடிக் கொள்கின்றனர் என்றார்.

    விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா பேசுகையில், சிறப்புக் குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்எல்சி நிறுவனம் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும். சமீபத்தில் என்எல்சி நிறுவனத்தில் 115 மாற்றுத் திறனாளிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்றார்.

    விழாவில், என்எல்சி இயக்குநர்கள் ராக்கேஷ் குமார், சுபீர்தாஸ், தங்க பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    முன்னதாக, என்எல்சி பொது மருத்துவமனையின் தலைமை பொதுக் கண்காணிப்பாளர் ஜனார்தன் மற்றும் நிதித் துறை பொதுமேலாளர் மதிவாணன் ஆகியோர் சிறப்புக் குழந்தைகளின் உரிமைகளை வாசிக்க, அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

     சிநேகா பள்ளி செயலர் ஜோதிகுமார் ஆண்டறிக்கை வாசித்தார். இயக்குநர்கள் கஞ்சன் ராக்கேஷ்குமார், சுதேஷ்னா தாஸ், தேவகி தங்கபாண்டியன், இந்து ஷிவ்ராஜ் சிங் ஆகியோர் பள்ளி ஆசிரியைகள், மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai