சுடச்சுட

  

  செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு: 3 பேர் தீக்குளிக்க முயற்சி

  By கடலூர்  |   Published on : 30th March 2016 06:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து 3 பேர் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றனர்.

  கடலூர் அருகே உள்ள பனங்காட்டு காலனியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தனியார் செல்லிடப்பேசி நிறுவனம் சார்பில், செல்லிடப்பேசி கோபுரம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

   இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மக்களவை தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் அப்பகுதி மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

  இதில் பங்கேற்ற பனங்காட்டு காலனியைச் சேர்ந்த ஹரிதாஸ்,  நடராஜன், ஆனந்தி ஆகியோர் திடீரென தங்களது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொள்ள முயன்றனர். அங்கு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக 3 பேரையும் தடுத்து மீட்டனர்.

  இதுகுறித்து பா.தாமரைச்செல்வன் கூறுகையில், செல்லிடப்பேசி கோபுரம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் நீதிமன்ற ஆணை பெற்றுள்ளதாக கூறுகின்றனர். ஆனால், அந்த ஆணையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பே பணிகளை முடித்திருக்க வேண்டும் என்றும், சூழ்நிலையைப் பொறுத்து காவல் ஆய்வாளர் இப்பிரச்னையில் முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மக்களின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

   உண்ணாவிரதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் செளந்தர், சார்லஸ், விமல், செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai