சுடச்சுட

  

  தாக்குதல் புகாரில் ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

  விருத்தாசலம் வட்டம் குருவன்குப்பத்தைச் சேர்ந்தவர் கோ.மாயவேல்(65). இவரது விவசாய நிலத்தின் அருகே, அதே பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து நடத்துநர் சி.ராமச்சந்திரன் (35) என்பவரது நிலம் உள்ளது. இந்த நிலையில், ராமச்சந்திரன் தனது வயலில் நெல் அறுவடை செய்வதற்காக, மாயவேல் வயல் வழியாக அறுவடை இயந்திரத்தை ஓட்டிச் சென்றாராம். இதனை அவர் தட்டிக் கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, மாயவேலை, ராமச்சந்திரன் தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாகத் தெரிகிறது.

  இதுகுறித்து மாயவேல் கொடுத்த புகாரின் பேரில் ஆலடி போலீஸார் வழக்குப்ப திவு செய்து ராமச்சந்திரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai