Enable Javscript for better performance
தில்லைக்காளியம்மன் கோயிலில் ரூ.6.22 லட்சம் உண்டியல் காணிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தில்லைக்காளியம்மன் கோயிலில் ரூ.6.22 லட்சம் உண்டியல் காணிக்கை

    By சிதம்பரம்  |   Published on : 30th March 2016 06:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 6 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.

    இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் சி.ஜோதி, நிர்வாக அதிகாரி க.முருகன், ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

    கோயில் அலுவலர்கள் வாசு, வெங்கடேசன், ராஜ்குமார், முத்துக்குமரன் மற்றும் கோயில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

    இதில், 6 லட்சத்து 22 ஆயிரத்து 229 ரூபாய் கிடைத்தது. மேலும் உண்டியலில் தங்கம் 94 கிராம், வெள்ளி 48 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம் மலேசியா ரிங்கட்-59, யுஎஸ்ஏ டாலர்-3, அரபு கிராம்-5, சவுதி ரியால்-1 ஆகியவை இருந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai