Enable Javscript for better performance
பயணிகள் நிழற்குடையில் ஆக்கிரமிப்பு அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பயணிகள் நிழற்குடையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

    By சிதம்பரம்  |   Published on : 30th March 2016 06:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தினமணி செய்தி எதிரொலியாக சிதம்பரத்தில் பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

    சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள பயணிகள் நிழற்குடை, வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறி, தள்ளுவண்டி வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து தினமணியில் கடந்த 26ஆம் தேதி புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

     இந்த நிலையில் சிதம்பரம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர்  கோவிந்தசாமி தலைமையிலான போலீஸார் பயணிகள் நிழற்குடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அகற்றி, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    மீண்டும் நிழற்குடைக்குள் வாகனங்கள், தள்ளுவண்டிகளை நிறுத்தாத வகையில் இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai