சுடச்சுட

    

    ரயில் பயணிகளிடம் விழிப்புணர்வுப் பிரசாரம்

    By விருத்தாசலம்  |   Published on : 30th March 2016 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருத்தாசலம் ரயில் நிலையத்தில் வருவாய்த் துறை சார்பில் பயணிகளுக்கு செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது.

    பேரவைத் தேர்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவை இலக்காகக் கொண்டு தேர்தல் ஆணையம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன்படி, விருத்தாசலம் ரயில் நிலையத்தில், வட்டாட்சியர் முரளி தலைமையில் பயணிகளிடம் விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

    மேலும், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கும் ஸ்டிக்கர்கள் ரயில் பெட்டிகளில் ஒட்டப்பட்டன.

     நிகழ்ச்சியில், நிலைய அலுவலர்கள் ஜெகதீசன், முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai