சுடச்சுட

  

  சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு விற்றதாக போலீஸார் இருவரை திங்கள்கிழமை கைது செய்துள்ளனர்.

  சிதம்பரம் நகரில் அரசின் தடையை மீறி வெளி மாநில லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக தினமணி நாளிதழில் கடந்த 26ஆம் தேதி செய்தி வெளியானது.

  இந்த நிலையில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீஸார் நகரில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வடக்கு மெயின் ரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக மந்தக்கரையைச் சேர்ந்த ராஜா (45), சேகர் (38) ஆகியோரைக் கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai