சுடச்சுட

    

    கடலூரில் வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    கடலூர் முதுநகர் வீரபத்ரசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் கே.செல்வம் (54). இறால் வியாபாரி. இவர் திங்கள்கிழமை இரவு தனது மனைவி, 2 குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். இவர் அதிகாலையில் எழுந்து பூஜையறைக்குச் சென்றபோது, சுவாமி படம் முன் வைத்திருந்த ரூ.53 ஆயிரம் பணம் திருடுபோனது தெரிய வந்ததாம்.

    இதையடுத்து, அருகிலிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது,  பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகையும் திருடுபோனது தெரியவந்ததாம். மேலும், வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லையாம்.

    இதுகுறித்து செல்வம் கொடுத்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கடலூர் முதுநகர் போலீஸார், சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாயுடன் வந்து தடயங்களை சேகரித்தனர். முதல்கட்ட விசாரணையில், மொட்டை மாடி வழியாக வீட்டின் உள்ளே நுழைந்தவர்கள் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai