சுடச்சுட

  

  அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கக அரசியல் அறிவியல் துறை சார்பில், தேசிய கருத்தரங்கம் மார்ச் 29,30 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.

  ஐசிஎஸ்எஸ்ஆர் (IC​S​SR) அமைப்பு நிதி உதவியுடன், இந்தியாவில் மனித உரிமைகள்- தற்போதைய பிரச்னைகளும், சவால்களும் என்ற தலைப்பில் பல்கலைக்கழக நூலக அரங்கத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை துணைவேந்தர் செ.மணியன் தொடங்கி வைத்தார்.

  அப்போது அவர் பேசியது: இந்தியாவில் பல்வேறு கலாசாரம், மதம், இன மக்கள் இணைந்து வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்கின்றனர். பல்வேறு பிரச்னைகள் நிலவினாலும் மனித உரிமைகள் இங்கு பெரிதும் மதிக்கப்படுகின்றன.

  மனித உரிமைகள் மீதான பல்வேறு சவால்களையும், சமூகம் எதிர்கொண்டு வரும் மனித உரிமைகளை மென்மேலும் வலுப்படுத்தி உறுதி மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

  கலைப்புல முதல்வர் ரா.ராஜேந்திரன் வாழ்த்துரையாற்றினார். அவர் பேசுகையில், மனித உரிமைகள் மென்மேலும் பல்வேறு விதங்களில் போற்றி பாதுகாத்திட வேண்டிய அவசியம் குறித்துத் தெரிவித்தார்.

  தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் புகழேந்தி தனது உரையில் பலவகையான மனித உரிமைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

   தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் ஏ.எம்.மூர்த்தி சிறப்புரையாற்றினார்.

  அவர் பேசுகையில், மனித உரிமைகள் அவசியம் குறித்தும், கல்வி உரிமை குறித்தும், சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவுகளிலும் மிகவும் பின்தங்கியுள்ள மக்களின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் எனவும், இதற்கு இளைய சமுதாயம் வழிநடத்தத் தயாராக வேண்டும் எனத் தெரிவித்தார்.

  முன்னதாக, இணை ஒருங்கிணைப்பாளர் மு.சுகிர்தா வரவேற்றார். நிறைவில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

  கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்புகள் அடங்கிய நூலை துணைவேந்தர் செ.மணியன் வெளியிட்டார்.

  மேலும், முனைவர் சி.சுப்பிரமணியன் எழுதிய தமிழ்நாட்டில் திருநங்கைகள்- சமூக நடத்தை, அந்தஸ்து மற்றும் உரிமைகள் என்ற நூல் வெளியிடப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai