சுடச்சுட

  

  நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் தமிழகமே மகிழும் எனத் தெரிவித்தார் திரைப்பட நடிகை விந்தியா.

   அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம், நெய்வேலியில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  நெய்வேலி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.   நகரச் செயலர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

  ஒன்றியச்  செயலர்கள் கமலக்கண்ணன்(பண்ருட்டி), கோவிந்தராஜ் (குறிஞ்சிப்பாடி), அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கச் செயலர் உதயகுமார், தலைவர் அபு மற்றும் நிர்வாகிகள் அல்போன்ஸ், தேவானந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத், நடிகை விந்தியா கலந்து கொண்டு பேசினர்.

  நடிகை விந்தியா பேசுகையில்,  நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் கருணாநிதி மற்றும் அவரது குடும்பம் மட்டுமே மகிழும். அதிமுக வெற்றி பெற்றால் தமிழகமே மகிழும்.

   ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் செய்து என்ன சாதித்தார்? அரசியலில் பொறுப்பு வகித்த போது சைக்கிள், டிராக்டர் ஓட்டாதது ஏன்? இதுமக்களை ஏமாற்றுவதற்கான பயணம்.

  நாட்டு  சுதந்திரத்துக்காக  போராடிய காங்கிரஸின் நிலை இன்று மோசமாக உள்ளது.

   ஊழலை ஒழிப்போம் எனக் கூறுகிறார் அன்புமணி ராமதாஸ், மருத்துவக் கல்லூரி அனுமதி வழங்கியதில் அவர் மீது சிபிஐ விசாரணை உள்ளது.

  ஆட்சிக்கு வந்தால் இலவச கல்வி கொடுப்போம் எனக் கூறும் அன்புமணி ராமதாஸ். அவரது கல்லூரியில் எத்தனை பேருக்கு இலவசமாக கல்வி வழங்குகிறார் என்பதை கூறமுடியுமா? என்றார்.  நகர அவைத் தலைவர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai