சுடச்சுட

    

    விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

    விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை வந்த மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மாதவி, மருத்துவமனையில்  கட்டு கட்டும் அறை, அறுவை அரங்குகள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் விவரம் அடங்கிய பட்டியல், நோயாளிகள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது, எலும்பு முறிவு பிரிவு மருத்துவர் பற்றாக்குறை உள்ளது. இப்பிரிவுக்கு கூடுதல் மருத்துவர் நியமிக்க ஆவண செய்யப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தற்போது 7 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 10 கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

    ஆய்வின்போது, தலைமை மருத்துவர் குலோத்துங்கச்சோழன், தலைமை ரத்த வங்கி அலுவலர் திருநாவுக்கரசு, தலைமைச் செவிலியர் மல்லிகா உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai