சுடச்சுட

    

    விருத்தாசலம் போக்குவரத்து காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதன்கிழமை விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

     விழிப்புணர்வுக் கூட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

     இதில், சாலை விழிப்புணர்வு, ஆட்டோக்களில் அதிகளவில் பயணிகளை ஏற்றக்கூடாது. ஓட்டுநர்களின் தொடர்பு எண்களை வழங்க வேண்டும். சந்தேகப்படும் படியான நபர்கள் ஆட்டோக்களில் பயணம் செய்தால், அது குறித்த விவரங்களை போலீஸாருக்குத் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

    விழிப்புணர்வுக் கூட்டத்தில், காவல் ஆய்வாளர் சேதுபதி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் வடிவேல், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன், அருள்செல்வன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai