Enable Javscript for better performance
என்.எல்.சி. ஊழியர் வீட்டில் கொள்ளை முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    என்.எல்.சி. ஊழியர் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    நெய்வேலி, புதுநகர், 24-வது வட்டத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இவரது அண்ணன் வைரமணி வீட்டை கண்காணித்து வந்தார்.

    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ரவீந்திரன் வீட்டை பார்வையிட சென்ற வைரமணி கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, பொருள்கள், துணிகள் சிதறிக் கிடந்தன.

    இதுகுறித்து, ரவீந்திரனுக்கு தகவல் அளித்தார்.  இதில், வீட்டில் நகை, பணம் ஏதும் வைக்கவில்லை எனத் தெரிய வந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai