சுடச்சுட

    

    என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 12-ஆம் தேதி சுரங்கம்-1 முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என ஏஐடியூசி மாவட்டச் செயலர் எம்.சேகர் தெரிவித்தார்.

     என்.எல்.சி., ஒப்பந்தத் தொழிலாளர்களின் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம், இந்திரா நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

     சங்க துணைத் தலைவர் செல்வமணி தலைமை வகித்தார். ஏஐடியூசி தேசிய தொலை தொடர்பு ஊழியர் சங்கச் செயலர் ஜெயராமன், மூத்த வழக்குரைஞர் மன்னார்குடி மார்க்ஸ், பிஎஸ்என்எல், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலர் எஸ்.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     ஏஐடியூசி மாவட்டச் செயலர் எம்.சேகர் சிறப்புரையாற்றினார். கடலூர் மாவட்டத் தலைவர் ஜெகரட்சகன், பொருளர் கல்யாணசுந்தரம், துணைத் தலைவர்கள் முனியன், திருஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஏஐடியூசி மாவட்டச் செயலர் எம்.சேகர் கூறியது:

     என்.எல்.சியில் பணியாற்றும் வெளி மாநில பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர் பணி நியமனம் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை விரைந்து அமல்படுத்த வேண்டும். இதனை வலியுறுத்து வரும் ஏப்ரல் 12ஆம் தேதி, முதலாவது சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

     ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறவுள்ள பேரவையில், சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலை குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai