சுடச்சுட

  

  கடலூர் நகர வீதிகளில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை அறுவைச்  சிகிச்சை செய்யும் பணியில் நகர நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

  கடலூர் நகரப் பகுதியில் ஆங்காங்கே தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்து வருகின்றன. இவைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கோடையின் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் வெறி நாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

  இவை பகல் மற்றும் இரவு நேரங்களில் நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை விரட்டிச் சென்று கடிக்க முயற்சிக்கிறது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன.

  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோரை நாய்கள் கடித்துள்ளன. இவர்கள் கடலூர் அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  வீதியில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து நகர நிர்வாகம் சார்பில் நாய்கள் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை மூலம் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என நகராட்சி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai