சுடச்சுட

  

  "கல்வியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கியவர் ஜெயலலிதா'

  By நெய்வேலி  |   Published on : 31st March 2016 06:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவிலேயே, கல்வியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கியவர் முதல்வர் ஜெயலலிதா என அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் போளூர் ஜெயகோவிந்தன் பேசினார்.

    அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம், கடலூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் தூக்கணாம்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

   கூட்டத்துக்கு வடக்கு ஒன்றியச் செயலர் பி.வி.ஜெ.முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். ஊராட்சிச் செயலர்கள் வேலாயுதம், ஞானம், தனசேகர், மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   கூட்டத்தில் பங்கேற்ற தலைமைக் கழக பேச்சாளர் ஜெயகோவிந்தன் பேசியது:

   தமிழகத்தில் பலர் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு முதல்வர் கனவு காண்கின்றனர். அவர்களின் பகல் கனவு பலிக்காது. தமிழகத்தில் சுனாமி, வெள்ளம் வந்தபோது நிர்கதியாய் நின்ற மக்களை காத்தவர் முதல்வர் ஜெயலலிதா.

    சீறுடை இல்லாமல் பள்ளிக்குச் செல்லாமல் ஏழை குழந்தைகள் இருக்கக் கூடாது என்பதற்காக ஆண்டுக்கு 4 செட் சீருடை,  புத்தகம், பை, ஜாமன்ட்ரி பாக்ஸ், எழுது பொருள், காலணி உள்ளிட்டவைகள் மாணவர்களுக்கு வழங்கியதன் விளைவாக கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக வந்துள்ளது எனத் தெரிவித்தார்.

  கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலர் கே.முருகுமணி, விவசாய பிரிவுச் செயலர் கே.காசிநாதன், மகளிரணிச் செயலர் நாகரத்தினம், ஜெயலலிதா பேரவை பொருளர் ஆர்.வி.ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai