சுடச்சுட

  

  கோஷ்டி மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

  காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீரானந்தபுரத்தைச் சேர்ந்த சுப்பையா மகன்கள் பன்னீர்செல்வம் (42), தமிழ்செல்வன் (40), செங்கல்வராயன் என்ற தமிழரசன் (35), ராமாமிர்தம் மகன் இளையராஜா (30). இவர்கள் சப்பாணிக்குட்டையில் உள்ள தங்களது வயலில் அறுவடை செய்த மணிலாவை மூட்டைகளாகக் கட்டி வைத்து காவலில் ஈடுபட்டனர். அப்போது, அதேப் பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி மகன் ஜெயராஜ் (26), இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த வயலை கடந்து சென்றாராம்.

  இதில், பன்னீர்செல்வம் தரப்புக்கும், ஜெயராஜுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஜெயராஜுக்கு ஆதரவாக க.ராமச்சந்திரன், க.ராஜேந்திரன், ரா.சரண்ராஜ் (23) ஆகியோர் சென்றதால் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில், ஜெயராஜின் முக்கால் பவுன் தங்க நகை காணாமல் போனதாம்.

   இதுகுறித்து இருதரப்பினரும் தனித் தனியாக கொடுத்தப் புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இருதரப்பைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், செங்கல்வராயன், இளையராஜா, சரண்ராஜ், ஜெயராஜ் ஆகியோரை கைதுசெய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai