சுடச்சுட

    

    சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கு குறித்த சிதம்பரம், சேத்தியாத்தோப்பு காவல் கோட்ட அதிகாரிகளைக் கொண்டு கோட்டாட்சியரின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில் கோட்டாட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பி.எஸ்.விஜயலட்சுமி தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசுகையில், அந்தந்த பகுதியில் உள்ள ரௌடிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும், வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

    கூட்டத்தில் சிதம்பரம் காவல் கோட்ட துணைக் கண்காணிப்பாளர் எஸ்.சுந்தரவடிவேலு, ஆய்வாளர்கள் மோகன் (சிதம்பரம்), ரமேஷ்ராஜ் (அண்ணாமலைநகர்), குமார் (குமராட்சி), வீரமணி (சேத்தியாத்தோப்பு) உள்ளிட்ட ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai