சுடச்சுட

    

    சுங்கச்சாவடி கட்டண உயர்வு: தவாக போராட்டம் நடத்தும்: தி.வேல்முருகன்

    By நெய்வேலி  |   Published on : 31st March 2016 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை அமல்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து தவாக போராட்டம் நடத்தும் என அதன் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

    தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1 முதல் மீண்டும் 20 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் கட்டண உயர்வை அமல்படுத்த மத்திய அரசு அனுமதித்திருப்பதை தமிழக வாழ்வுரிமைக்  கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

    தமிழகத்தில் உள்ள 4,974 கி.மீ. தொலைவுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கத் தான் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாலையை பராமரிப்பது அரசின் அடிப்படை  கடமைகளில் ஒன்று.

    ஆனால், சாலைகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல், தனியாரிடம் சாலை பராமரிப்பை ஒப்படைத்து சுங்கக் கட்டணம் என்ற பெயரில் வசூலித்து வருகின்றனர்.

    தமிழகத்தில் உள்ள 41 சுங்கச்சாவடிகளில், 29 சுங்கச்சாவடிகளில் தனியாரும், 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டண வசூல் செய்கிறது.

    இதுவரை வசூலிக்கப்பட்ட பணம் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இந்நிலையில், ஏப்ரல் 1 முதல் சூரப்பட்டு, வானகரம், கிருஷ்ணகிரி, வேலன்செட்டியூர், சாலைப்புதூர், பள்ளிக்கொண்டா, வாணியம்பாடி, எட்டூர்வட்டம், கப்பலூர், நாங்குநேரி, பரனூர், ஆத்தூர், புதுக்கோட்டை, பட்டரை பெரும்புதூர், சிட்டம்பட்டி, பூதக்குடி, லெட்சுமணப்பட்டி, லெம்பாலக்குடி, நெமிலி, சென்னசமுத்திரம் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை அமல்படுத்தப் போகிறது. இதற்கு அனுமதி அளித்த பாஜகவை கண்டிக்கிறோம்.

    சுங்கக் கட்டண உயர்வால் விலைவாசி பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து தவாக போராட்டம் நடத்தும்.

    எனவே, சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற்று ஒட்டுமொத்த சுங்கச்சாவடிகளை அகற்றிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai