Enable Javscript for better performance
செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், புதன்கிழமை கோட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

    கடலூர் அடுத்துள்ள பனங்காட்டு காலனிப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி கட்டுமானப் பணி நடைபெற்றது.

    இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.  அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் நெல்லிக்குப்பம் உதவி ஆய்வாளர், செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஹரிதாஸ், நடராஜன், ஆனந்தி ஆகியோர் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

    இந்நிலையில், புதன்கிழமை கோட்டாட்சியரைச் சந்தித்து ஹரிதாஸ் மற்றும் பனங்காட்டு காலனி மக்கள் மனு அளித்தனர். அதில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

    நிகழ்வின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதிச் செயலர் தாமரைச்செல்வன், அமைப்புச் செயலர் திருமார்பன், தொகுதிச் செயலர் அறிவுடைநம்பி, செய்தித் தொடர்பாளர் புதியவன் உள்ளிட்டோர் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai