Enable Javscript for better performance
தேர்தல்: விறுவிறுப்பு அடைந்துள்ள சுவர் விளம்பரப் பணி- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல்: விறுவிறுப்பு அடைந்துள்ள சுவர் விளம்பரப் பணி

    By நெய்வேலி  |   Published on : 31st March 2016 06:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2016 சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் சுவர் விளம்பரம் எழுதும் ஓவியர்கள் விறுவிறுப்பு அடைந்துள்ளனர்.

     டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்கள் வருவதற்கு முன்னர் சுவர் விளம்பரம் பிரதான இடத்தை பெற்றிருந்தது.

     மக்கள் அதிகம் கூடும் இடம் மற்றும் முக்கிய இடங்களில் எளிதில் பார்வையில் படும் வகையில் சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

      அரசியல் கட்சியினர் தங்களது தலைவர்களின் பிறந்த நாள், மாநாடு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து விளம்பரங்கள் எழுதுவது வழக்கம்.

    இந்நிலையில், வீடு மற்றும் வணிக நிறுவனத்தின் சுவர்களில் விளம்பரம் எழுதக் கூடாது எனவும், அவ்வாறு உரிமையாளரின் அனுமதி பெற்று சுவர் விளம்பரம் எழுதினாலும், அதை குறிப்பிட்ட காலத்துக்குள் அக்கட்சியினர் தனது சொந்த செலவில் அழித்துத் தர வேண்டும் எனவும், அரசு சுவரில் விளம்பரம் எழுதக்கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

     இதனால், சுவர் விளம்பரம் எழுதும் பழக்கம் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து வந்தது. மேலும், டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்கள் பிரபலமடைந்ததால், ஓவியர்கள் வேலை இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

     இந்நிலையில், மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளதால், சுவர்களில் இடம் பிடிப்பதிலும், விளம்பரம் எழுதுவதிலும் அரசியல் கட்சியினர் இடையே போட்டா போட்டி நிலவுகிறது.

    இதனால் சுவர் விளம்பரம் செய்யும் ஓவியர்கள் விறுவிறுப்படைந்துள்ளனர்.

     இதுகுறித்து சுவர் விளம்பரம் எழுதுபவர் கூறியது.

     டிஜிட்டல் பேனர் கலாசாரம் வருவதற்கு முன்னர் நல்ல வேலைவாய்ப்பு கிடைத்தது. அரசியல் கட்சியினர் மட்டுமன்றி வணிக நிறுவனத்தினரும் சுவர் விளம்பரத்துக்கு முக்கியத்துவம் அளித்தனர்.

    டிஜிட்டல் பேனர் வரவால் சுவர் விளம்பரம் தொழில் மறைந்து வருகிறது. வேலை கிடைக்காததால் வீடுகளுக்கு வர்ணம் பூசும் தொழில் செய்து வருகிறோம்.

     தற்போது தேர்தல் நடக்கவுள்ளதால் சுவர் விளம்பரம் எழுதும் பணி சூடுபிடித்துள்ளது எனக் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai