சுடச்சுட

  

  கடலூருக்கு வருகை தரும் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென, கடலூரில் நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  பாமக கடலூர் கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடலூர், சுப்பராயலு நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

  மாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.ஆர்.பி.வெங்கடேசன், ஒன்றியச் செயலர்கள் ஆ.விஜயகாந்தி, தடா.தட்சிணாமூர்த்தி, சகாதேவன், ராமலிங்கம், இளவரசன், ராமச்சந்திரன், நகரச் செயலர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மாநில துணை பொதுச்செயலர் அ.தர்மலிங்கம், துணைத் தலைவர் ப.சண்முகம், துணைப் பொதுச்செயலர் கு.திருஞானம், வன்னியர் சங்க துணைத் தலைவர் பெ.தனசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

  கூட்டத்தில், ஏப்ரல் 1-ஆம் தேதி கடலூரில் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸுக்கு சிறப்பான  வரவேற்பு அளிப்பது.

  இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்கள் மற்றும் வியாபாரிகளை பங்கேற்கச் செய்வது. மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் நிறுத்தப்படும் பாமக வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai