சுடச்சுட

  

  போக்குவரத்துக்கு தகுதியற்ற கிராமச் சாலைகள்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

  By நெய்வேலி  |   Published on : 31st March 2016 06:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல கிராமங்களில் சாலைகள் குண்டும் குழியுமாகவும், மணல் படர்ந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

  கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியத்தில் 42 பஞ்சாயத்துகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.

   கடந்த நவம்பர் மாதம் கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் ஊருக்குள்ளும், விளைநிலத்திலும் புகுந்து பெரும் நாசத்தை ஏற்படுத்தியது.  காட்டாற்று வெள்ளம் சிறுபாலம் மற்றும் சாலைகளை அடித்துச் சென்றது.

  தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

   ஆனால், நாளடைவில் இப்பணிகளில் தோய்வு ஏற்பட்டது. பெரும்பாலான கிராமங்களில் சாலை வசதி செய்து கொடுக்கப்படவில்லை. சாலைகள் குண்டும் குழியுமாகவும், மண் மேடிட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

   இதுகுறித்து மேலிருப்பு மதியழகன் என்பவர் கூறியதாவது:

   நவம்பர் மாதம் பெய்த கனமழை அதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் ஒவ்வொருவரும் சேதம் மற்றும் நஷ்டத்தை அடைந்துள்ளனர். சம்பவம் நடந்து 5 மாதங்கள் ஆகியும் சாலை சீரமைப்புப் பணி முழுமையாக நடைபெறவில்லை.

   மண் அரிப்பு மற்றும் சாலை துண்டான இடத்தில் மணல் மூட்டைகள் மற்றும் தடுப்புச் சுவர் கட்டி ஜல்லி கற்கள் மற்றும் செம்மண் கொட்டி உள்ளனர்.

   ஜல்லி கற்கள் மீது செல்லும் வாகனங்கள் பஞ்சராகி நடுவழியில் நிற்கிறது. கிராமப் புறத்தில் உள்ள உட்சாலைகள் மண் மேடிட்டு காணப்படுகிறது.

   இதனால், விவசாய நிலத்துக்கு இடுபொருள்கள் எடுத்துச் செல்வதிலும், விளைந்த பொருள்களை வீட்டிற்கோ அல்லது சந்தைக்கோ எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மணலில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர் என கூறினார்.

   எனவே, பாதிக்கப்பட்ட சாலைகளையும், மண் மேடிட்ட சாலைகளையும், மாவட்ட நிர்வாகம் விரைந்து சீரமைத்துத் தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai