சுடச்சுட

  

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல் விளக்கம்

  By விருத்தாசலம்  |   Published on : 31st March 2016 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொதுமக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக விருத்தாசலத்தில் புதன்கிழமை செயல்முறை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

  சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

  பயிற்சி பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிக்குச் சென்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விளக்க உள்ளனர்.

  செயல்முறை விளக்க பயிற்சியை கோட்டாட்சியர் செந்தில்குமார் தொடங்கிவைத்தார். வட்டாட்சியர் முரளி, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன், தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜ்குமார், வருவாய் ஆய்வாளர்கள் செல்வமணி, ராமர், கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai