சுடச்சுட

  

  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் சந்தித்து, வன்னிய கிறிஸ்தவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

  வன்னிய கிறிஸ்தவ பேரவை மற்றும் நலச் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், வன்னிய கிறிஸ்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், சிறுபான்மையினர் நிர்வகிக்கும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் எனவும், இதனை வரும் சட்டப்பேரவை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினராம்.

  நெய்வேலி பங்குத் தந்தை ரட்சகர் அடிகளார், கிறிஸ்தவ பேரவை நிறுவனர் ஆரோக்கியதாஸ், வன்னிய கிறிஸ்தவ நலச் சங்கத் தலைவர் சாத்திப்பட்டு அருள், பொதுச்செயலர் கல்லுக்குழி ராயப்பன் உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனுவை வழங்கினர்.

  நிகழ்ச்சியின்போது, திமுக தலைமை நிலையச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai