Enable Javscript for better performance
நாம் தமிழர் கட்சியின் வெற்றி உறுதி: சீமான்- Dinamani

சுடச்சுட

    

    நாம் தமிழர் கட்சியின் உறுதி தமிழகமெங்கும் உறுதியாகி விட்டதாக சீமான் பேசினார்.

    கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். சனிக்கிழமையன்று தனது கடைசி கட்ட பிரசாரத்தை துவக்கிய அவர் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். இறுதியில் செம்மண்டலத்தில் தனது தேர்தல் பரப்புரையை நிறைவு செய்தார்.

    அப்போது அவர் பேசுகையில், தமிழக வாக்காளர்களிடம் நாம் இதுவரையில் வாக்கு கேட்கவில்லை. கேட்டதெல்லாம் தமிழ் இனத்தின் உரிமையை மீட்டெடுக்கவும், அடுத்த தலைமுறையினருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாய்ப்புக் கேட்டோம். மக்கள் மனதில் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதால் அந்த மாற்றத்தை நாம் தமிழர்களால் மட்டுமே வழங்க முடியும் என்றும் நம்புகிறார்கள். எனவே, தமிழகம் முழுவதும் கட்சியின் வெற்றி உறுதியாகி விட்டது.

    கடலூர் தொகுதியில் நான் வெற்றி பெற்றால் வெளியூர் சென்று விடுவதாக கூறுகிறார்கள். ஆனால், நான் கடலூரிலேயே தங்கியிருப்பேன். கடலூரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருப்பதால் இங்கு தரமான புற்றுநோய் சிகிச்சை மையம் உருவாக்கப்பாடுபடுவேன். சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்வதோடு, அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்துவேன்.

    கருத்துக்கணிப்புகளை எப்போதும் நம்புவதில்லை. அவைகள் கருத்துத் திணிப்பாக உள்ளது. அடிப்படை அரசியல் மாற்றமும், அரசு நிர்வாகத்தை அடியோடு மாற்றி அமைப்பதுமே நாம் தமிழர்களின் நோக்கம். அதனை நிறைவேற்றுவோம்.

    திமுக, அதிமுக என்ற 2 பெரிய கட்சிகளையும் நாம் தமிழர் கட்சியின் மெழுகுவர்த்தி எரித்து விடும் என்றார்.

    வாக்கு சேகரிப்பின் போது மாநில நிர்வாகி பாக்கியநாதன், மாவட்டத் தலைவர் கு.சாமிரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai