Enable Javscript for better performance
பூத்சிலிப் வழங்கும் பணி மந்தம்: 100 சதவீத வாக்குப்பதிவு எட்டப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    பூத்சிலிப் வழங்கும் பணி மந்தம்: 100 சதவீத வாக்குப்பதிவு எட்டப்படுமா?

    By dn  |   Published on : 15th May 2016 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பூத் சிலிப் வழங்கும் பணி மந்தமாக இருப்பதால் 100 சதவீத வாக்குப்பதிவினை எட்ட முடியுமா என்ற நிலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

    தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நாளை (மே 16) நடைபெறுகிறது. தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் 19,99,507 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கடந்த தேர்தல்களின் போது அரசியல் கட்சியினர் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கான பூத்சிலிப்பை வழங்குவார்கள். ஆனால் சமீபத்திய தேர்தல்களின் போது தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையை மாற்றி அமைத்து அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர்களே பூத்சிலிப் வழங்குவார்கள் என்று அறிவித்தது.

    அதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த மே 7 ஆம் தேதியன்று பூத்சிலிப் வழங்கும் பணி துவங்கியது. ஆனாலும், பெரும்பாலானவர்களுக்கு பூத்சிலிப் விநியோகிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    குறிப்பாக வாக்குச்சாவடி அலுவலர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் செல்லாமல் அப்பகுதியிலுள்ள முக்கிய பிரமுகர்கள் மூலமாகவே பூத் சிலிப்பை வழங்கியுள்ளனர். இதனால், பூத்சிலிப் கிடைக்கப்பெறாதவர்கள் யாரை அணுகுவது என்று தெரியவில்லை.

    மாவட்ட தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் மாவட்டத்தில் இதுவரையில் 17,98,055 வாக்காளர்களுக்கு மட்டுமே பூத் சிலிப் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது 89.92 சதவீதமாகும். பூத் சிலிப் வழங்கலின் போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி விடுபட்டவர்கள், இடம் மாறியவர்கள், இறந்தவர்கள் 4,888 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது அரசியல் கட்சியினர் பூத்சிலிப் வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் அரசியல் கட்சியினர் வீடு, வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கவில்லை. மேலும், தேர்தல் பணியில் ஈடுபடுவர்கள் இன்று (மே 15) தங்களது தேர்தல் பணியில் ஈடுபடுவதால், அவர்கள் மீதமுள்ளவர்களுக்கு பூத் சிலிப்பை வழங்க மாட்டார்கள். இதனால், பூத்சிலிப் இதுவரையில் கிடைக்கப்பெறாதவர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை வாக்காளர்களால் அறிந்துக் கொள்ள முடியவில்லை.

    இதனால் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 100 சதவீத வாக்குப்பதிவு என்ற நிலையை கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் எட்ட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai