Enable Javscript for better performance
வேட்பாளர்களின் கடைசிகட்ட பிரசாரத்தால் திணறிய கடலூர்- Dinamani

சுடச்சுட

    

    வேட்பாளர்களின் கடைசிக்கட்ட பிரசாரத்தால் கடலூர் நகரம் சனிக்கிழமை மாலையில் திணறியது.

    தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை மே 14 ஆம் தேதி மாலை 6 மணியுடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அதனைத் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது. இதன்படி அனைத்து வேட்பாளர்களும் சனிக்கிழமை மாலையில் இறுதி பிரசாரத்தில் தீவிரம் காட்டினர். குறிப்பாக இறுதிகட்ட பிரசாரத்தை தங்களுக்கு மிகவும் ராசியாக கருதப்படும் இடத்திலிருந்து துவங்கி மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் நிறைவு செய்யவே விரும்பினர். மேலும், ஒவ்வொரு கட்சியினரும் இந்த இறுதிக்கட்ட பிரசாரத்தில் தங்களது வலிமையையும் காண்பிக்க முடிவு செய்தனர்.

    கடலூர் தொகுதியில் 5 முக்கிய கட்சிகள் உள்பட 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் 14 பேரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டதால் கடலூர் நகரம் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது. குறிப்பாக அதிமுக வேட்பாளரும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும் ஒரிடத்தில் நேருக்கு நேர் சந்தித்தனர். அதேப்போன்று, திமுக, பாமக வேட்பாளர்கள் அண்ணா பாலம் அருகிலும், திமுக நாம் தமிழர் வேட்பாளர், மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர் ஆகியோர் மற்றொரு இடத்திலும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டியிருந்தது. குறிப்பாக ஒவ்வொரு கட்சியினரும் சுமார் 100-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிளில் கட்சிக் கொடிகளுடன் வாக்குக்கேட்டு சென்றதால் இருக்கட்சியினரும் நேருக்கு நேர் சந்திக்கும் போது மோதல் ஏற்படும் நிலையும் உருவாகியது. எனினும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் துணை ராணுவத்தினரின் உதவியுடன் நிலமையை சமாளித்தனர்.

    குறிப்பாக மாலை 4 மணிக்கு துவங்கிய இந்த போக்குவரத்து நெரிசல் மாலை 6.45 மணி வரையில் நீடித்தது. இதனால், நகரின் அனைத்து முக்கிய சாலைகள் மட்டுமின்றி தெருக்களுக்கு செல்லும் சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai