Enable Javscript for better performance
25இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வருகிற 25ஆம் தேதி நடைபெறுகிறது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்ட விவசாயிகளின் மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 25ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
     இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்டத்தில் பேச விரும்பும் விவசாயிகள் காலை 8 மணி முதல் 10.15 மணிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
     மேலும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாகவும் அளிக்கலாம்.
     அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதன் விவரம் பின்னர் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும் என அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai