Enable Javscript for better performance
அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    காட்டுமன்னார்கோவில் வட்டார வள மைய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், திருமுட்டம் குறுவட்ட மைய அறிவியல் கண்காட்சி, அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
     காட்டுமன்னார்கோவில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சி.கலைச்செல்வி தலைமை வகித்தார். வட்டார வளமைய பயிற்றுநர் ரா.சித்ரா வரவேற்றார். கண்காட்சியில் உடல்நலம், போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட தலைப்புகளில் 10 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை வைத்து செயல் விளக்கம் அளித்தனர். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.கலைச்செல்வி, ஆசிரியர் பயிற்றுநர் சித்ரா, பட்டதாரி ஆசிரியர் மலர்செல்வன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு சிறந்த கண்காட்சி படைப்புகளை தேர்வு செய்தனர்.
     இதில் புதுக்குப்பம் ஆர்.சி.தொடக்கப்பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது. கீழ்புளியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முதல் பரிசையும், மேல்புளியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 2ஆவது பரிசையும், திருமுட்டம் அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி 3ஆவது பரிசையும் பெற்றன. மேல்நிலையில் திருமுட்டம் த.வீ.செ. மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. ஆசிரியர் பே.சேட்டு நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai