Enable Javscript for better performance
இடைக்கால நிவாரணம் வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    இடைக்கால நிவாரணம் வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

    By கடலூர்,  |   Published on : 28th November 2016 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூரில் தமிழக ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் மாதாந்திர சிறப்புக் கூட்டம், மாநிலத் தலைவர் மா.கண்ணன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
     மாத அறிக்கையை பொதுச் செயலர் பாபு.சுப்ரமணியன், வரவு-செலவு அறிக்கையை பொருளர் டி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாசித்தனர்.
     கூட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். 8ஆவது ஊதியக்குழு நடைமுறைக்கு வரும் வரை ஓய்வூதியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும்
     ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய அரசு அகவிலைப் படியை உயர்த்தி வழங்கியதுபோல் தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப் படியை உயர்த்த வேண்டும். 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன், இணைச் செயலர் ஜெ.ராஜசுந்தரம், நிர்வாகிகள் ஏ.தாஸ், எம்.ஜெயராமன், ஆர்.தனராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     முன்னதாக உதவிப் பொதுச் செயலர் எம்.தண்டபாணி வரவேற்க, செயற்குழு உறுப்பினர் பி.குணசேகரன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai