Enable Javscript for better performance
இன்று திருவதிகை கோயிலில் 2ஆவது சோமவார விழா- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத 2ஆவது சோமவார விழா திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
     திருவதிகையில் ஸ்ரீபெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவாரத்தை (திங்கள்கிழமை) முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
     அதன்படி, கடந்த நவ.21ஆம் தேதி முதல் சோமவார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில், திங்கள்கிழமை 2ஆவது சோமவாரத்தை முன்னிட்டு, பிற்பகல் 4 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற உள்ளது. இரவு 8 மணியளவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் பெரியநாயகி அம்பாள், வீரட்டானேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வருகின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai