Enable Javscript for better performance
உயர்மதிப்பு நோட்டு விவகாரம்: பாஜக ஆதரவு பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    உயர்மதிப்பு நோட்டு விவகாரம்: பாஜக ஆதரவு பிரசாரம்

    By கடலூர்,  |   Published on : 28th November 2016 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உயர்மதிப்பு நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசை ஆதரிக்க வலியுறுத்தி கடலூரில் பாஜகவினர் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.
     மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது எனகடந்த 8ஆம் தேதி இரவு அறிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
     இந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள், வணிகர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும். கருப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கோரி பாஜக சார்பில் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன.
     கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர், செம்மண்டலம், புதுப்பாளையம், கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் மாநில பிரசார அணிச் செயலர் கோவிந்தராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னிரவி, மாவட்ட மீனவரணித் தலைவர் சரவணன் ஆகியோர் பேசினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai