Enable Javscript for better performance
ஏடிஎம்கள் தொடர்ந்து முடக்கம்: வாடிக்கையாளர்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    ஏடிஎம்கள் தொடர்ந்து முடக்கம்: வாடிக்கையாளர்கள் அவதி

    By கடலூர்,  |   Published on : 28th November 2016 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
     மத்திய அரசு கடந்த 8ஆம் தேதி இரவு உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. எனினும் பொதுமக்கள் தங்களிடமுள்ள உயர்மதிப்பு பணத்தை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ள கால அவகாசமும் அளிக்கப்பட்டது.
     மேலும் பொதுமக்கள் தங்களிடமுள்ள பணத்தை வங்கியில் முதலீடு செய்து வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. இதனையடுத்து பொதுமக்கள் வங்கிகள், தபால் நிலையங்களில் தங்களது பணத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வங்கிகளுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்பட்டன. இதன் விளைவாக இரு நாள்களிலும் மாவட்டத்தில் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படவில்லை. இதனால் அவசரத் தேவைக்கு பணம் எடுக்க வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
     மாவட்டத்தில் 376 ஏடிஎம்கள் செயல்பட்டு வரும் நிலையில், நவ.8ஆம் தேதிக்குப் பின்னர் அவற்றில் 70 சதவீதம் இயங்கவில்லை. வங்கிகளுக்கு வரும் பணத்தின் அளவினைப் பொறுத்து தனியார் வங்கி ஏடிஎம்கள் சில நேரங்களில் மட்டும் இயங்கின. அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளின் பெரும்பாலான ஏடிஎம்கள் நிரந்தரமாக மூடப்பட்டன. கடலூரில் சனிக்கிழமை சில ஏடிஎம்கள் இயங்கிய நிலையில், சிறிய நகரம், கிராமப்புறங்களில் பெரும்பாலான ஏடிஎம்கள் இயங்கவில்லை. குறிப்பாக சனிக்கிழமை 90 சதவீத ஏடிஎம்கள் இயங்கவில்லையென வங்கித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை நிலைமை மேலும் மோசமடைந்து, மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான ஏடிஎம்கள் சில மணி நேரம் மட்டும் இயங்கின.
     இதுகுறித்து வங்கி அலுவலர் ஒருவர் கூறுகையில், வெள்ளிக்கிழமை வெறும் ரூ.6 லட்சத்தை வைத்துக்கொண்டு அன்றைய நாளை கடத்தியுள்ளோம். திங்கள்கிழமை புதிய ரூ.500 நோட்டுகள் வருமென எதிர்பார்க்கிறோம். அந்த நோட்டுகள் வந்த பிறகே நிலைமை சீரடையும் எனத் தெரிவித்தனர்.
     ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிவரை கடலூர் மாவட்ட வங்கிகளுக்கு புதிய ரூ.500 நோட்டுகள் வரவில்லையென வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai