Enable Javscript for better performance
கருகும் பயிரைக் காப்பாற்ற வேண்டும்: அரசு செயலரிடம் விவசாயிகள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கருகும் பயிரைக் காப்பாற்ற வேண்டும்: அரசு செயலரிடம் விவசாயிகள் கோரிக்கை

    By சிதம்பரம்  |   Published on : 28th November 2016 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீரின்றி கருகும் பயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு செயலர் ககன்தீப்சிங்பேடியிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியை தமிழக அரசின் வேளாண்மைத் துறை செயலர் ககன்தீப்சிங்பேடி சனிக்கிழமை ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் உடனிருந்தார். பின்பு ம.உத்தமசோழகன் கிராமத்துக்குச் சென்ற அரசு செயலர், நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
     அப்போது விவசாய சங்கத் தலைவர் ஏ.பி.ரவீந்திரன் அவரிடம் கூறுகையில், நீரின்றி பயிர்கள் கருகி வருகின்றன. பயிர் முழுமையாக வளர்ச்சி அடையாமல் 40-50 நாள்கள் பயிராக உள்ளன. பணப் பரிவர்த்தனையும் இல்லாததால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே தமிழக அரசு விவசாயிகளின் நிலங்களில் அரசு வாகனங்கள் மூலம் பொட்டாஷ் கரைசல் மற்றும் உயிரி உரங்களை தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கருகும் பயிரை காப்பாற்ற வேண்டும் என்றார்.
     பாஜக விவசாய சங்கத் தலைவர் கே.வி.கண்ணன் கூறுகையில், வீராணம் ஏரியில் 44 அடி நீர் உள்ளது. ஏரியிலிருந்து கிழக்குப் பகுதியில் உள்ள 28 பாசனக் கால்வாய்களில் நீர் திறந்துவிட்டால், கருகி வரும் பயிர்களை ஓரளவுக்கு காப்பாற்ற முடியும் என்றார். பின்னர் ககன்தீப்சிங்பேடி செய்தியாளர்களிடம் கூறுகையில், கடலூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் விவசாயம், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம். தற்போது ஒரு மாதம் வளர்ச்சியடைந்த நெற்பயிருக்கு வேளாண்மைத் துறை மூலம் பிபிஎம்எஃப் ஸ்பிரே அடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai