Enable Javscript for better performance
சரக்கு வாகனத்தில் ஆள்களை ஏற்றக் கூடாது: ஓட்டுநர்களுக்கு போலீஸார் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சரக்கு வாகனத்தில் ஆள்களை ஏற்றக் கூடாது: ஓட்டுநர்களுக்கு போலீஸார் எச்சரிக்கை

    By நெய்வேலி,  |   Published on : 28th November 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆள்களை ஏற்றிச் செல்ல சரக்கு வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என பண்ருட்டி போக்குவரத்து போலீஸார் ஓட்டுநர்களிடம் எச்சரித்துள்ளனர்.
     குறிஞ்சிப்பாடியில் சனிக்கிழமை ஏற்பட்ட சரக்கு வாகன விபத்தில் 27 பேர் காயமடைந்தனர். இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் உத்தரவின் பேரில், பண்ருட்டியில் சரக்கு (டாடா ஏசி) வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம், அரசு பொது மருத்துவமனை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பி.சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சரக்கு வாகனத்தை ஆள்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தக் கூடாது. ஓட்டுநர்கள் உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் இல்லாதவர்களை வாகனத்தை இயக்க அனுமதிக்கக் கூடாது என ஆலோசனை வழங்கப்பட்டது.
     மேலும், விதிகளை மீறி சரக்கு வாகனத்தில் ஆள்களை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். பின்னர், சரக்கு வாகனங்களுக்கு ஆர்.சி. புத்தகம், ஓட்டுநர்களுக்கு உரிமம் உள்ளதா என ஆய்வு செய்தனர்.
     கூட்டத்தில், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அமர்நாத், காவலர்கள் ஜெயக்குமார், மோகன் மற்றும் 150-க்கும் மேற்பட்ட சரக்கு வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai