Enable Javscript for better performance
பயிர்க் காப்பீடு விழிப்புணர்வுப் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    பயிர்க் காப்பீடு விழிப்புணர்வுப் பிரசாரம்

    By சிதம்பரம்,  |   Published on : 28th November 2016 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரத்தில் விவசாயிகள் பயிர்க் காப்பீடு திட்டத்தில் சேருவது குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
     சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் சேர வருகிற நவ.30ஆம் தேதி கடைசி நாளாகும்.
     எனவே இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயனடையும் வகையில் சிதம்பரம், பரங்கிப்பேட்டை வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வுப் பிரசாரத்தை வேளாண்துறை மேற்கொண்டுள்ளது.
     இந்த பிரசாரப் பயணத்தை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை இயக்குநர் எஸ்.ரமேஷ், வேளாண் அலுவலர் சி.பி.உண்ணாமலை, துணை வேளாண் அலுவலர் ஆர்.திருஞானம், ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தசெல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு நகல் மற்றும் வரைவோலையுடன் அருகிலுள்ள உதவி வேளாண்மை அலுவரிடம் நவ.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என உதவி வேளாண்மை இயக்குநர் எஸ்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai