Enable Javscript for better performance
ரூபாய் நோட்டு விவகாரம்: இன்று திமுக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ரூபாய் நோட்டு விவகாரம்: இன்று திமுக ஆர்ப்பாட்டம்

    By கடலூர்,  |   Published on : 28th November 2016 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் திங்கள்கிழமை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அக்கட்சியின் மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
     அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி முன்னேற்பாடு எதுவுமின்றி, அறிவித்து விட்டார். அறிவிப்பு வெளியிட்டு 16 நாள்களாகியும், பணத்தட்டுப்பாடு பிரச்னை சிறிதும் தீரவில்லை. இதனால் ஏழைகள், நடுத்தர வகுப்பினர், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், சிறு வணிகர்கள் அனுபவிக்கும் துன்பத்துக்கு அளவில்லை.
     அத்தியாவசியப் பொருள்களைக்கூட வாங்க முடியாத நிலையில், பொது மக்கள் வங்கிகள், ஏடிஎம் மையங்களில் பல மணி நேரம் காத்துக் கிடக்கின்றனர். அவர்களில் இதுவரை 75 பேர் மரணமடைந்துள்ளனர். எனவே, மக்களின் இன்னல்களுக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திங்கள்கிழமை (நவ.28) காலை 10 மணியளவில் கடலூர், மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் அனைத்து அணியினர், கூட்டணிக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என அதில் அழைப்பு விடுத்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai