Enable Javscript for better performance
வி.சி.க. தெருமுனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் முதுநகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இசுலாமிய சனநாயகப் பேரவை சார்பில், ஒருங்கிணைந்த பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து வெள்ளிக்கிழமை மாலை தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
     கூட்டத்துக்கு இசுலாமிய சனநாயகப் பேரவை மாவட்ட அமைப்பாளர் முஹம்மது மொய்தீன் தலைமை வகித்தார். கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் கண்டன உரையாற்றினார்.
     அமைப்புச் செயலர் தி.ச.திருமார்பன், மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன், மாவட்ட பொருளர் கெய்க்வாட் பாபு, மாநில துணைச் செயலர் த.ஸ்ரீதர், தொகுதி செயலர் மு.அறிவுடைநம்பி, நிர்வாகிகள் சுகுமார், அஸ்கர், நூருல், ம.சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai